தேர்தல் அமைப்பு மூலம் சர்வாதிகாரப் போக்கு கொண்டவர்கள் ஆட்சிக் கட்டிலில் அமரும் கெடுவாய்ப்பு உருவாகியுள்ளதால், ‘ஜனநாயகம்’ என்ற தத்துவத்தின் நம்பகத்தன்மை குறித்த விவாதம் சர்வதேச அரங்கில் மேலெழுந்துள்ளது.
ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகங்கள், சர்வாதிகாரிகள் ஆட்சியில் அமர உறுதுணையாக இருக்கும் காலக்கட்டதில் நாம் வாழ்ந்து வருகிறோம்.
இந்தத் தொகுப்பின் பெரும்பாலான கதைகள் ஊடகத்துறை சார்ந்தவை. பரபரப்பு, வைரல், டிரெண்டிங், ரேட்டிங் செய்திகளை உருவாக்கும் பெருந் தொழிற்சாலைக்குள் உள்ள மனிதர்களின் மனப்போக்குகள், நடத்தைகள், செயல்பாடுகள், அனுபவங்கள் சார்ந்தவை.
இக்கதைகள், நம்மை வந்தடையும் செய்திகளை உருவாக்குகிறவர்களைப் பற்றிய செய்திகள் அல்ல. ஒவ்வாமை, சமரசம், துரோகம், வெற்றிக் களிப்பு, தாழ்வெண்ணம், மனநிறைவு, உழைப்பு, அங்கீகாரம், நிராகரிப்பு, போலித்தனம் ஆகியவற்றின் கூட்டுருக்களாக வரும் இவர்களது கதைக்குள் நாம் நம்மையும் காண நேர்கிறது.
புனைவுகளை விடவும் புதிர்த் தன்மைகள் நிறைந்த நடப்புண்மைகளைப் பின் தொடர்வதனால், இதோ இந்த இடத்தில், இந்த நொடியில் நிகழும்போதே எழுதப்பட்ட கதைகள் இவை.
No product review yet. Be the first to review this product.