ஒரு மாற்றுத்திறனாளியைப் பார்ப்பதுபோலத்தான்- பரிதாபமாக, வக்கிரமாக. ஏளனமாக- இந்தச் சமூகம் ஒற்றைப் பெற்றோரைப் பார்க்கிறது. தனியாக என்னதான் செய்வார்கள். எப்படித்தான் வாழ்கிறார்கள் என்று அவர்களைத் தன்னிலிருந்து வேறுபடுத்தி விநோதமாக யோசிக்கிறது. யாரும் விரும்பி வேண்டுமென்றே விபத்திற்குள்ளாவதில்லை. ஆயிரம், லட்சம் காரணங்கள் இருந்தாலும் 'நீ பார்த்துப் போயிருக்கணும்' என்பதுதான் தீர்மானமாகச் சொல்லப்படுகிறது. சரி ஒரு கை போய்விட்டது. எத்தனை நாள் அழலாம்? எனக்கு மட்டும் ஏன் இப்படி என்று கதறலாம். பிறகு. ஒரு கையோடு வாழப் பழகித்தானாக வேண்டும். மாற்றுத்திறனாளிக்கு, இழந்ததற்கும் சேர்த்து மற்றவற்றில் பலம் அதிகம். இப்படித்தான் ஒற்றைப் பெற்றோரின் பலத்தை நான் பார்க்கிறேன். அசாதாரணமானதாய். ஆச்சரியமானதாய்...
No product review yet. Be the first to review this product.