காலம் கடந்துவிட்டதால் இனி நடக்காது என்று எண்ணிக் கொண்டிருந்த கொடூரம், தண்டனை விதிக்கப்பட்டு முப்பத்து மூன்று ஆண்டுகளுக்குப் பின் நிகழ்ந்தது. இதன் விளைவாக, மரண வீட்டுக்குள் நுழைந்து நிரந்தர ஊனத்தோடு வெளியேறிய படைப்பாளியின் அனுபவத்தைப் புனைவின் கூறுகளோடு விவரிக்கும் நூல் இது. மரண தண்டனையோ கொலைத் தாக்குதலோ சல்மான் ருஷ்டியின் எழுத்தின் மையமான கருத்துச் சுதந்திரத்தை எவ்வித சமரசத்துக்கும் ஆளாக்கவில்லை என்பதைப் பதிவுசெய்கிறது இந்தக் கலை, இலக்கிய ஆவணம். புனைவுக்கும் அல்புனைவுக்கும் இடையேயான கோட்டை அநாயாசமாக அழிக்கும் நடையும் படிமங்களும் கொண்ட இந்தத் தன்வரலாற்றுப் பிரதி நம்பகமான தமிழ் வடிவத்தில் உருமாறியுள்ளது.
No product review yet. Be the first to review this product.