தமிழின்
நவீன கவிதைகள்மீது பலரும் பல விதமான பார்வைகளை முன்வைத்திருக்கிறார்கள்.
மூத்த படைப்பாளியான வண்ணநிலவன் தன்னுடைய பார்வையில் தமிழ்க் கவிஞர்களை
அணுகுகிறார். சமகாலக் கவிஞர்களிலிருந்து தொடங்கிப் பின்னோக்கிப் பயணிக்கும்
இந்த அலசல்கள் தமிழின் முக்கியமான கவிஞர்கள் பலருடைய கவிதைகளைக் கறாராக
அணுகி மதிப்பிடுகின்றன. வண்ணநிலவனின் விமர்சனங்கள் கூர்மையானவை;
சமரசமற்றவை. பூசி மெழுகுவதிலோ தட்டிக்கொடுப்பதிலோ நம்பிக்கையற்ற
விமர்சகரின் பார்வைகளை இந்தக் கட்டுரைகளில் காணலாம். நவீன தமிழ்க்
கவிதைகளின் பரப்பையும் வீச்சையும் புரிந்துகொள்வதற்கான தடயங்களையும்
காணலாம். யவனிகா ஸ்ரீராம், போகன் சங்கர் ஆகியோரிலிருந்து ந.
பிச்சமூர்த்திவரையிலுமான பயணமாக விரியும் இந்தக் கட்டுரைகள் கவிதை உலகை
ஊடுருவிப் பார்க்கக்கூடிய வெளிச்சத்தைக் கொண்டிருக்கின்றன.
No product review yet. Be the first to review this product.