குடியாண்மை சமூகம் (Civil Society) என்பது ஜனநாயகம், சமத்துவம், சகோதரத்துவம் என்கிற முதலாளியக் கருத்தியலுடன் உறவு கொண்டது. குறிப்பாக இந்தியாவில் குடியாண்மைச் சமூகம் என்ற ஒன்று இங்குள்ள சனாதன வருண சாதியச் சமூகத்தை உடைத்து உருவான முதலாளிய ஜனநாயக அமைப்பு அல்ல என்பதை இந்நூல் புரியவைக்க முயல்கின்றது. இந்திய சமூகம் வலுவான சனாதனக் கருத்தியலைப் பேசும் மனுதருமக் கோட்பாட்டினை தனது உள்ளுரையாகக் கொண்டிருக்கிறது. அது ஒரு ஜனநாயக சமத்துவக் குடியாண்மைச் சமூகத்தை வளரவிடாமல் மாறாக; தனக்கு ஏற்ப, அம்பேத்கர் சொன்ன ஏற்றத்தாழ்வான படிநிலை சமத்துவ அமைப்பாக, ஒரு பழமைவாத வருண சாதியத்தன்மை கொண்ட குடியாண்மைச் சமூகத்தை அமைத்துள்ளது என்பதைப் பேசுவதே இத்தொகுப்பு.
No product review yet. Be the first to review this product.