கம்யூனிஸ்ட்டுகள் ஆதிக்கம் செலுத்தும் இடத்தில் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் ஒடுக்கப்படுகிறார்கள். இஸ்லாமியர் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்ட்டுகள் ஒடுக்கப்படுகிறார்கள். வெள்ளைக் கிறிஸ்தவர்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் கறுப்பு கிறிஸ்தவர்கள், பூர்வகுடிகள் ஒடுக்கப்படுகிறார்கள். தமிழ்த் தேசியம் கோலோச்சிய காலத்தில் இலங்கையில் இஸ்லாமியர்கள் ஒடுக்கப்பட்டனர். எவ்விதப் பாரபட்சமும் இன்றி, இனவெறுப்பு விருப்பின்றி, இப்புத்தகம், உலகம் முழுவதும் நடைபெற்றுவரும் அடக்குமுறைகளை, பாதிக்கப்பட்டவர்களின் குரலாகவும் அவர்கள் பக்கம் நின்று பேசும் இலக்கியவாதிகளின் குரலாகவும் ஒலிக்கிறது.
இந்தக் கதைகள் குடிநீரில் மலம் கலக்கப்பட்ட வேங்கை வயலுக்கானவை. நாகரிக மனிதர்களால் சுற்றிவளைத்துக் கொல்லப்பட்ட கேரளத்தின் பூர்வகுடி மனிதருக்கானவை; மதச்சார்பின்மை பேசும் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட துறவிகளுக்கானவை. தாமிரபரணியில் கொல்லப்பட்டவர்களைப் பற்றி எழுதிவிட்டு, அதற்குக் காரணமானவர்களுடன் கைகோர்த்துக்கொண்ட போராளிகளின் முகத்திரையைக் கிழிப்பவை.
B.R. மகாதேவனால் மொழிபெயர்க்கப்பட்டு ‘கிழக்கு டுடே’ இணையத்தளத்தில் தொடராக வெளிவந்த இந்தக் கதைகள் மிகவும் முக்கியமானவை.
No product review yet. Be the first to review this product.