குழந்தைகள் அறிவியல் உண்மைகளைக் கண்டடைய வேண்டும். நாம் வாழும் உலகம் பற்றி, இயற்கை பற்றி, எல்லாவற்றையும் பற்றி ஆதாரங்களுடன் விளக்குவது அறிவியல் ஆகும். இயற்கை தொடர்பான அனைத்து அம்சங்களையும் ஒருவர் படிக்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை. மருத்துவ விஞ்ஞானத்தை அனைவரும் படிப்பது அவசியமில்லை. அன்றாட வாழ்விற்குத் தேவையான ஆரோக்கிய வழிமுறைகளை மட்டும் தெரிந்துகொண்டால் கூட போதுமானது. உடல் நிவை மோசமானால் மருத்துவர்கள் வைத்தியம் பார்ப்பார்கள், மருத்துவர்கள் போல் ஒவ்வொருவரும் மருத்துவ விஞ்ஞானம் அறிந்திருக்கத் தேவையில்ல. மற்ற இயற்கை விஞ்ஞானங்களுக்கும் இது பொருந்தும், ஆனால், நாம் வாழும் சமூகம் மற்றும் அமைப்புகள் தொடர்பாக விளக்கம் அளிக்கும் அறிவியல் பாடத்தை நாம் அப்படி கருத முடியாது. நாம் மனிதர்கள். விலங்குகள் இல்லை. பிறந்தோம், இறக்கிறோம் என்று விலங்குகள் வாழ்வது போல் மனிதர்கள் வாழ முடியாது. விலங்குகளுக்கு அறிவு, அறிவியல் எதுவும் தேவைப்படுவதில்யை ஆனால் மனிதர்கள் மனிதர்களிடையிலான சமூக உறவு மற்றும் பிணைப்பு குறித்து தெரிந்திருக்க வேண்டும். அதுதான் பொருளாதாரம் என்னும் விக்ஞாளம். மனிதர்களிடையிலான உறவுகள், அவர்கள் வாழ்க்கை எப்படி அமைகிறது என்று விளக்கும் விஞ்ஞானம், சுடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என அனைத்தையும் விளக்கும் விஞ்ஞானம்.
No product review yet. Be the first to review this product.