சமகாலத்தின் முக்கியமான ஊடகர்களில் ஒருவரான சமஸ். 04.12.1979-ல் மன்னார்குடியில் பிறந்தவர். 'தினமணி', 'விகடன்' ஆசிரியர் குழுக்களில் பணியாற்றியவர். நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க 'தி இந்து' குழுமம் தமிழில் நானிதழ் தொடங்க முடிவெடுத்தபோது, அதன் உருவாக்க அணியாகத் தேர்ந்தெடுத்த ஐவரில் ஒருவர். இந்து தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில், அதன் நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். இப்போது 'அருஞ்சொல்' இதழின் நிறுவன ஆசிரியர். பயண இலக்கிய நூல்களில் விசேஷமான ஒரு நூல் என்று உறுதிட்டம் இந்நூலைக் கூறிட முடியும். சாதாரணமான உரையாடல்களின் ஊடாக. ஒரு மக்கள் நல அரசு எப்படியானதாக அமைய வேண்டும்!' என்ற வரையறையையே உருவாக்க இந்நூல் தலைப்படுகிறது ஆட்சியாளர்கள் தொடங்கி மாணவர்கள் வரை வாசிக்க வேண்டிய ஒரு நூல் இது.
No product review yet. Be the first to review this product.