மௌனன் யாத்ரிகாவின் கவிதை உலகத்திற்குள் செல்ல ஓரளவேனும் சங்க இலக்கியப் பயிற்சி தேவை. முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் பற்றியும்; கூற்று முறைகள், திணைத் துறைகள் குறித்தும் குறைந்தபட்ச அறிதல் வேண்டும்.
சமகால வாழ்க்கை மீது கொண்டிருக்கும் கசப்புகளை வெளிப்படுத்த மொழியின் வெவ்வேறு சாத்தியங்களை இக் கவிதைகள் முயல்கின்றன. பழமையின் செழுமையை எடுத்து அதை இன்றைய வாழ்க்கைக்கும் மொழிக்கும் பதிலி செய்வது ஒருவகை சாத்தியம். அதைத்தான் மௌனன் யாத்ரிகா இத்தொகுப்பில் செய்திருக்கிறார்.
- பெருமாள் முருகன்
No product review yet. Be the first to review this product.