மிகுந்த பரபரப்போடு செய்தித்தாள்களில் வாசித்திருப்போம். தொலைக்காட்சிகளில் பார்த்திருப்போம். என்ன நடந்தது, எப்படி நடந்தது என்று வியப்போடு நிறையவே விவாதித்திருப்போம். அதன்பின் மெல்ல, மெல்ல நம் நினைவுகளிலிருந்து இந்தச் செய்திகள் மங்கி ஒரு கட்டத்தில் மறைந்தே போயிருக்கும். பிரேமானந்தா, ராம்விலாஸ் வேதாந்தி, ஹர்ஷத் மேத்தா, லட்சுமி சிவபார்வதி, வி.வி. கிரி, எம்.எஃப். ஹூசேன், ரஞ்சன் விஜேரத்ன, உமா மகேஸ்வரன் போன்றோரைக் கடைசியாக எப்போது நாம் கடந்து வந்தோம்? இவர்கள் உருவாக்கிய புயல் எந்த அளவுக்கு இன்று நம் நினைவில் இருக்கிறது? வரலாற்றின் இண்டு இடுக்குகளில் அகழ்வாராய்ச்சி செய்து ஒரு காலத்தில் பெரும் தாக்கம் செலுத்திய பல ஆளுமைகளையும் அரசியல் நிகழ்வுகளையும் மீட்டெடுத்து வந்து அளிக்கிறார் ஜெ. ராம்கி. ஒவ்வோர் அத்தியாயமும் ஒரு துப்பறியும் கதைபோல் இறக்கைக் கட்டிப் பறக்கிறது.
No product review yet. Be the first to review this product.