இந்திய வரலாற்றின் தொடக்கப் புள்ளி, சிந்து சமவெளி நாகரிகம். சிந்து சமவெளி நம் தொன்மம். நம் அடையாளம். நம் கூட்டுப் பெருமிதம். நன்கு திட்டமிடப்பட்ட சாலைகள், கட்டடங்கள், நீர் மேலாண்மை, தொலைதூர தேசங்களுடனான வணிகத் தொடர்பு, ஆடை அணிகலன்கள், கலை என்று ஒரு பண்பட்ட நாகரிகம் செழித்து வாழ்ந்ததற்கான உயிர்ப்புள்ள சாட்சி. சிந்து சமவெளி நாகரிகம் எப்படி, எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது? அதில் யாரெல்லாம் ஈடுபட்டிருந்தனர்? இந்த மாபெரும் பணியில் இந்தியர்களுக்கு என்ன பங்கு இருந்தது? பிரிட்டிஷாருக்குச் சமமாக அவர்களும் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்தனரா? ஆம் எனில் அவர்களைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட கதையை எளிமையாகவும் விறுவிறுப்பான முறையிலும் இதில் பதிவு செய்திருக்கிறார் நிவேதிதா லூயிஸ். முன்னதாக அவர் எழுதிய ‘ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை’ மிகுந்த வரவேற்பு பெற்ற நூலாகும்.
No product review yet. Be the first to review this product.