Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

Compare list is empty

Please add products to compare.

மதங்கள்: இந்திய மதங்களும் இந்தியாவுக்கு வந்த மதங்களும்

(0)
Price: 200.00

In Stock

SKU
ADAIYALAM 052
இந்தியா பல இன மக்கள் வாழும் ஒரு துணைக் கண்டம்.  சநாதன இந்துமதம், பௌத்தம், சமணம் முதலானவை இந்த மண்ணில் முகிழ்த்த மதங்கள். இவை மூன்றும் மிக விரிவான தத்துவ, இலக்கிய வளங்கள் நிறைந்தவை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னுள்ள கங்கைச் சமவெளியில் இவற்றோடு இன்னும் பல தத்துவப் போக்குகள் செழித்திருந்தன. ஆரோக்கியமான விவாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள் இவற்றிடையே நடந்தும் வந்தன. நம் தமிழக வரலாறும் அதேபோலப் பழமையும் தனித்துவமும் வாய்ந்த ஒன்று.

வடபுலத்தில்கூட கி.பி. நூற்றாண்டுகளில் சிரமண மதங்களின் மீது கடும் வன்செயல்கள் மேற்கொள்ளப்பட்டன. தமிழகத்தில் கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரையில் மதங்களிடையே ஆரோக்கியமான விவாதங்கள் நடந்துவந்தன. இவற்றோடு உலகப் பெருமதங்களான கிறிஸ்தவமும், இஸ்லாமும் நீண்டகாலமாக இந்த மண்ணில் வேர் பதித்து வாழ்ந்து வருகின்றன. கல்வி, மருத்துவம் எனப் பல்துறை வளர்ச்சிக்கும் அவை வித்திட்டுள்ளன.

இன்று உலகெங்கிலும், மதத்தின் பெயரால் வெறுப்பும் வன்செயல்களும் விதைக்கப்படும் நிலையில் மதங்களிடையே புரிந்துணர்வுகள் அவசியம். உலக மதங்கள் குறித்து ஆழமும் விரிவும் மிக்க ஆய்வு நூல்களைத் தொடர்ந்து  எழுதிக்கொண்டும் உரையாடிக்கொண்டும் இருக்கும் அ.மார்க்ஸ் எழுதியுள்ள இந்தக் கட்டுரைத் தொகுப்பு இந்திய மதங்கள் குறித்த ஆழமான புரிதல்களை வாசிப்பவர்களுக்கு அளிக்கும்.
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.