இந்திய அளவில் கடும் அதிர்வுகளை ஏற்படுத்திய பெருநிகழ்வு, மீனாட்சிபுரம் பெருந்திரள் மதமாற்றம். அதுபற்றி தமிழில் வெளிவரும் முதலாவது முறைசார் ஆய்வு நூல் இது. சர்ச்சைக்குரிய இந்நிகழ்வு நடைபெற்ற 1981-82 காலத்திலேயே செய்யப்பட்ட இவ்வாய்வு, மதமாற்றத்துக்கான அடிப்படைக் காரணிகளை முதன்மையாக ஆராய்கிறது. அத்துடன் மதமாற்றம் நிகழ்ந்த விதம், மதமாற்றத்துக்குப் பிறகான விளைவுகள் ஆகியவற்றையும்; இந்நிகழ்விற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், மதத்தலைவர்கள், சமூக நிறுவனங்கள், மத நிறுவனங்கள், பல்வேறு சமூகக் குழுக்களைச் சேர்ந்த தனிமனிதர்கள் எவ்வாறு எதிர்வினையாற்றினார்கள் என்பதையும் சமூகவியல் நோக்கில் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது. சாதி, மதம், வகுப்புவாதம் தொடர்பான விவகாரங்களில் அக்கறை கொண்ட அனைவருக்கும் இதுவோர் கட்டாய வாசிப்பு.
No product review yet. Be the first to review this product.