கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் கல்வி போன்று இறுகியவற்றின் மீது கேள்விகள் எழுப்பப்படும் என்று எதிர்ப்பார்த்தேன். இரண்டு ஆண்டுகளில் எண்ணற்ற துயர்களை அடைந்த போதும் எதன் மீதும் கேள்விகளை நாம் ஏன் எழுப்பவில்லை என்ற கேள்வியே இப்போது மனதுள் இருக்கிறது. இந்தக் கட்டுரைகளை இப்போது வாசிக்கும் போது எழுதப்பட்ட காலத்தைவிட இப்போது எவ்வளவு நகர்ந்திருக்கிறோம் என்றும் யோசிக்கிறேன். மெல்ல மலரும் ஆசிரியர் என்ற தலைப்பின் கீழ் அவ்வப்போது மனதுள் எழுந்த கேள்விகளையும், எண்ணங்களையும் தொகுத்துள்ளேன்.
No product review yet. Be the first to review this product.