நவீன இஸ்லாமிய எழுச்சியின் நாயகர்களில் முதன்மையானவர் சையித் குதுப். அவருடைய புத்தகங்களில் அதிகம் வாசிக்கப்பட்ட, விவாதிக்கப்பட்ட புத்தகம் இதுதான். இராணுவ நீதிமன்றத்தில் அவர்மீது, இந்தப் புத்தகத்தை எழுதியதும் ஒரு குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டது. இந்நூலில் அவர், மனித சமூகம் இஸ்லாத்தின் நிழலில் மட்டுமே ஆரோக்கியமான வளர்ச்சியை நோக்கிச் செல்லவும் நிம்மதியான வாழ்க்கையை வாழவும் முடியும் என்பதை விளக்குவதுடன்; மற்ற கண்ணோட்டங்கள் தோல்வியைச் சந்திக்கும் என்பதையும், அவை எப்படி மனித சமூகத்தை அழிவை நோக்கிக் கொண்டுசெல்கின்றன என்பதையும் எடுத்துக்காட்டுகிறார். இஸ்லாத்தின் உன்னதமான வழிகாட்டலின் பாதையிலுள்ள மைல்கற்களைப் பட்டியலிடும் குதுப், வரலாற்றில் அப்படியொரு முன்மாதிரியான சமூகம் எவ்வாறு உருவானது என்பதையும், அதற்குப் பின்னாலிருந்த காரணிகள் குறித்தும், அதன் தனித்தன்மைகள் குறித்தும் தெளிவுற விவரிக்கிறார்.
No product review yet. Be the first to review this product.