சண்முகத்தின் விமர்சனம் புதிய சொல்லாக்கங்களை உருவாக்கிச் செல்கிறது. அவை தோற்றத்தில் மிரட்டுபவையாக இருந்தாலும் எழுத்தில் மாறிவரும் போக்குகளைச் சுட்டுபவையாக இருக்கின்றன. அகப்பரப்பின் அழிப்பாக்கம் என்றொரு தொடரை உருவாக்குகிறார். சிக்கலான இந்தச் சமூக வாழ்வினுள் அகப்பட்டு, அல்லல்பட்டு மீண்டு வரத்துடிக்கும் மனிதர்களின் அகப்பரப்பு தக்க வைத்துக்கொள்ளக் கூடியதா அல்லது அழித்து உருவாக்கக் கூடியதா என்பதை அந்த மனிதன் தானே தீர்மானிக்க வேண்டும்? அதை ஒரு விமர்சகன் தானே கண்டறிந்து சொல்ல வேண்டும்? அந்தத் தடுமாற்றத்தை இந்தச் சொல்லாக்கம் துல்லியமாகச் சொல்கிறது. ஒரு நல்ல இலக்கியத்தைக் கண்டுகொள்வதற்கான அடிப்படைப் பதங்களாக இருக்கிற பொருண்மை, இருண்மை, புதிர்மை போன்ற சொற்களிலிருந்து அடுத்த கட்டத்திற்கு நகர்கிற ஒரு சொல்லாக்க முயற்சி இது..
No product review yet. Be the first to review this product.