இந்த நூலில் வெரியர் எல்வின் தம்மைப் பற்றி மட்டுமல்ல,தம்முடைய வாழ்வாக இருந்த பழங்குடி மக்களின் பண்பாட்டைப் பற்றியும் பேசுகிறார்.இதை எல்வின் தாம் பிறந்த இங்கிலாந்தில் தொடங்கி,ஒரு திருச்சபை ஊழியராக இந்தியாவுக்கு வந்து,மகான்களின் தொடர்புகளுக்கும் நிறுவனங்களின் பயுஅமுறுத்தல்களுக்கும் இடையே,தாம் கண்டடைந்த இந்தியப் பழங்குடிகளின் வாழ்க்கையினூடாக,தாம் எவ்வாறு இந்தியரானார் எனும் கதை மூலம் விவரிக்கிறார்.மேலும் நாகரிக சமுதாயத்தின் சுயநல மதிப்பீடுகளைவிட பழங்குடிகளின் மதிப்பீடுகள் எந்தளவிற்கு மனிதத்தன்மை மிக்கவையாகவும் அறவியல் ரீதியாக உயர்ந்தவையாகவும் இருக்கின்றன என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.
இவையே வெரியர் எல்வினை ஓர் உலக புகழ்பெற்ற மானிடவியலராக ஆக்கியிருக்கின்றன.இந்திய அரசு தனது உயர்ந்த விருதான பத்மபூஷண் விருதையும் இந்நூலின் ஆங்கிலப் பதிப்புக்குச் சாகித்திய அகாடெமி விருதையும் வழங்கியிருக்கின்றது.
No product review yet. Be the first to review this product.