பிச்சமூர்த்தி வலியுறுத்தற வேதாந்தம் அல்லது அத்வைதம் அல்லது ஆன்மீகம் இந்திய மரபில் தொன்றுதொட்டு வர்ற ஒண்ணுன்னுதான் தோணுது. அந்த மரபில் காலங்காலமாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில்களைத்தான், கருத்துக்களைத்தான் அவர் திரும்பச் சொல்கிறார். ஏற்கெனவே உள்ள பதில்களைத்தான் தன்னுடைய கண்ணாடியில் பிரதிபலிக்கச் செய்கிறார்.
சுகுமாரன்
நவீன இலக்கிய வடிவங்களிலயே, தமிழ்ல அதிகமாக் கையாளப்பட்டிருப்பது கவிதைதான்! ஆரம்ப வருடங்கள்லெ புதுக் கவிதைய ‘அகண்ட காவிரி’ ஆகிவிட்டதாக நம்பிய
ந. பிச்சமூர்த்தி, இன்றைக்கு இருக்குற எண்ணிக்கையையும், நிலையையும் பார்த்தா அதிர்ந்தே போவார். ஆனாலும், இதன் மூலச் சுனைகளில் முதன்மையானவர் என்கிற பெருமையை ஒருபோதும் இழக்கமாட்டார்.
யுவன் சந்திரசேகர்
No product review yet. Be the first to review this product.