அன்புள்ள சந்துரு, சமூகத்தில், கடையருக்கும் கடையருக்காகப் பணியாற்றுவதற்கு ஏதுவாக நீங்கள் பணி ஓய்வுபெற முடிவெடுத்திருப்பது ஒரு மகத்தான தியாகம். கருப்பு அங்கி அணிந்திருக்கும். லட்சிய தாகம் கொண்ட சகாக்கள் வியந்து பார்க்கும் ஒருவராக இருங்கள். உங்களின் பொது வாழ்க்கை என்பது ஒட்டுமொத்த மனிதகுல நலனுக்குமான பிரார்த்தினையாகும். ஒரு நாள் நாம் இருவரும் சந்திப்போம். -- வி.ஆர்.கிருஷ்ணய்யர் சந்துருவினுடைய முக்கியத்துவமானது, அவருடைய வேகத்திலும் விவேகத்திலும் மட்டும் இல்லை: தன்னால் இயன்ற சீர்திருத்தத்துக்கு முற்படும் அவருடைய சமத்துவத் தேட்டத்திலும், தயக்கமே இல்லாமல் தன்னுடைய துறையையே சுயவிமர்சனத்துக்குள்ளாக்கும் தார்மீகத்திலும் இருக்கிறது. இந்திய நீதித் துறை வரலாற்றில் முன்னுதாரணம் இல்லாத ஒரு நூல் என்று இதைத் தாராளமாகச் சொல்லலாம்.
No product review yet. Be the first to review this product.