இயேசு எந்த மதத்தையும் நிறுவவில்லை. அவர் தான் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்த மனித நேய மீறல்களை, அன்பின் தூரிகையால் சரிசெய்ய முயன்றவர். அன்பே இறை என்றும், அன்பைப் பின்பற்றுதலே மறை என்றும், அன்பின்றி அமையாது விண்ணுலகு என்றும் தனது போதனைகளை அன்பின் மீது கட்டமைத்தவர்! காலம் காலமாய் போதிக்கப்பட்டு வந்த நூற்றுக்கணக்கான சட்டங்களை 'அன்பு' எனும் ஒற்றைப் புள்ளியில் இறுக்கிக் கட்டியவர்.
மனிதத்தைப் போதித்து, எளியவர்களுக்காகவே வாழ்ந்து, தன்னைப் பலி கொடுத்த இயேசு தியாகத்தின் திருஉரு. இந்த நூல், இயேசுவின் வாழ்க்கையை எளிமையாகவும், நேர்மையாகவும், வரலாற்று அரசியல் பின்னணியோடும் பதிவு செய்கிறது. இது மதத்தை முன்னிறுத்தும் நூல் அல்ல. இயேசு எனும் மாமனிதரை முன்னிறுத்தும் நூல். அவரது பிறப்பு, வாழ்க்கை , போதனைகள், வலிகள், மரணம் மற்றும் அதற்குப் பிந்தைய நிகழ்வுகளையும் இந்த நூல் விவிலியத்தின் அடிப்படையில் பதிவு செய்கிறது.
No product review yet. Be the first to review this product.