ஆ. மாதவனின் சிறுகதைகள் எதார்த்தவாதப் பிரிவைச் சார்ந்தவை. அன்றாட வாழ்வில் நமது பார்வைக்குத் தட்டுப்படும் மனிதர்களும் நிகழ்ச்சிகளுமே அவரது புனைவுலகிலும் இடம்பெறுகின்றன. அவை நமக்குச் சாதாரண மனித நடவடிக்கைகளாக மட்டுமே பார்வையில் பட்டுக் கலைந்து போகின்றன. நமது பார்வைக்கு அகப்படாத அந்த உலகின் இயக்கத்தை மையமாகக் கொண்டது மாதவனின் கலைப்பார்வை. அந்த செயல்களில் காணப் படும் நன்மையும் தீமையும் அந்த மனிதர்களின் இயல்பு என்று எந்த மிகையும் சார்பும் இல்லாமல் சித்தரிக்கப்படுகின்றன. குற்றமும் காமமும் பழி வாங்கலும் இயல்பான மனித குணங்களாகவே முன்வைக்கப் படுகின்றன. அவை பற்றி நாம் கொண்டிருக்கும் கருத்துகளை அவர்கள் மீது சுமத்திப் பார்க்க அனுமதிக்காத வகையிலேயே அந்தச் சித்தரிப்புகள் அமைகின்றன.
No product review yet. Be the first to review this product.