இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின்போது திருநெல்வேலி பகுதியில் நடக்கும் ஒரு கொலை, ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்குகிறது. ஏனென்றால் கொல்லப்பட்டவர் பிரிட்டிஷ் போலிஸ் அதிகாரி. யார் கொன்றது? வரலாற்றின் முடிச்சுகளைச் சுவாரஸ்யமாகக் கற்பனை மூலம் புனைவாக்கி இருக்கிறார் சுதாகர் கஸ்தூரி. நாவல்களில் நிஜ பாத்திரங்களையும் அவர்களுக்கு இணையாகக் கற்பனைப் பாத்திரங்களையும் ஒருசேர உலவவிடுவது கத்தி மேல் நடக்கும் ஒரு செயல். வ.உ.சிதம்பரம் பிள்ளையும், சுப்ரமண்ய சிவாவும், மாடசாமி பிள்ளையும் வந்து போகும் நாவலில், பிரிட்டிஷ் அதிகாரி ஆண்டர்சன்னும் ஆனியும் மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் நிகர்செய்யும் பாத்திரமாக முத்துராசா. யார் இந்த முத்துராசா? ஏன் சமகாலத்தில் அவரைப் பற்றிப் பேசுகிறார்கள்? ஆனிக்கும் ஆண்டர்சன்னுக்கும் என்ன ஆனது? திரில்லரின் வேகத்தில் வரலாற்றின் சில பக்கங்களையும் புரிந்துகொள்ளலாம், வாருங்கள். உங்களுக்காகவே தன் நாட்குறிப்புகளை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார் நடேச பிள்ளை.
No product review yet. Be the first to review this product.