1980களில் ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் இப்ராகிம்பட்டினத்தில் நிலமற்ற தலித் மக்கள் கடுமையான வறுமைக்கும் நிலவுடமைச் சமூகத்தினரின் கொடூரமான ஆதிக்கத்துக்கும் இடையில் சிக்கிச் சின்னாபின்னமானார்கள். கீதா ராமசாமி எனும் முப்பது வயதேயான இளம்பெண் அந்த மக்களுக்கான போராளியாக வந்துசேர்ந்தார். கட்டுப்பெட்டியான பிராமணக் குடும்பத்தில் பிறந்த அவர், தன் கல்லூரிக் காலத்தில் நக்சலைட் இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டார். அவரது ‘நக்சல்’தனத்தைச் சரிசெய்ய அவரது குடும்பம் மனநல சிகிச்சை வழங்கியது. தொடர்ந்து அவசரநிலைக் காலகட்டத்தில் தலைமறைவு வாழ்க்கையையும் மேற்கொண்டார். அதிலிருந்து மீண்ட கீதா, அடுத்து என்ன செய்வதென்று குழப்பத்தில் இருந்தபோது, விவசாயக் கூலிகளின் பிரச்சினைகள் பற்றி அறிந்தார். நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட அந்தக் கொத்தடிமைகளின் மீட்சிக்காகப் போராடத் தொடங்கினார். தான் முன்னெடுத்த போராட்டங்களின் வழியே தெலுங்கு நிலப்பரப்பின் கலை, பண்பாடு, சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களை உயிரோட்டத்துடன் கூறிச் செல்கிறார் கீதா ராமசாமி
No product review yet. Be the first to review this product.