கலையோடு ஒருவனுக்கு எவ்வளவு பரிச்சயம் இருப்பினும் எத்தருணம் அல்லது எது அவனை கலைஞனாக மாற்றுகிறது என்பது ஒரு பெரும் புதிர்.
திருவள்ளுவரை, மாணிக்கவாசகரை, பாரதியை அவர்களது எழுத்துக்கள் வழியே பார்க்கையில், அவர்கள் தங்கள் வாழ்க்கையின் நெருக்கடிகளை எப்படி எதிர்கொண்டிருப்பார்கள். அவர்கள் பிறருடன் எப்படி பேசி பழகியிருந்திருப்பார்கள். அன்பு மட்டுமேவா இருந்திருக்கும். சண்டை போட்டிருக்கமாட்டார்களா. கோபப்பட்டிருக்கவேமாட்டார்களா. அழுதிருக்கமாட்டார்களா. எவ்வுலகிலாவது சந்தித்தால் அவர்களிடம் இது பற்றியெல்லாம் கேட்க வேண்டும். இவர்களோடு ஒருவனுக்குப் பழக முடிந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்றெல்லாம் சாத்தியமில்லாததை நினைத்ததுண்டு.
ஆனால், நம் காலத்தில் நாம் கலைஉறவு கொண்டிருக்கும் மனிதர்களிடம் பழகுதல் சாத்தியம் தானே. அப்படி பழகவும் பார்க்கவும் பயணப்பட்டபடியேதான் இருக்கிறேன். அந்தப் பயணத்தில் சிலர் அவர்களது படைப்புகளைவிடவும் செம்மாந்து நின்று ஆச்சர்யம் தந்தனர். அதுபோன்ற சில வியப்புகளின் கையளவு பகிர்தலே இக்கட்டுரைகள்.
No product review yet. Be the first to review this product.