இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் கடந்த நான்காண்டுகளில் எழுதப்பட்டவை. ஒட்டுமொத்தமாகப்படிக்கும்போது எனது கவிதை வெளியீடு இரண்டு விதமாக இதில் வெளிப்பட்டிருக்கின்றன என்று தோன்றுகிறது. உள்ளடக்கமும் மொழியும் சார்ந்து அவற்றை குழப்பமும் மூட்டமும் தகிப்பும் புனைவும்கொண்ட கவிதைகள் என்றும், தெளிவும், அறிந்தஒன்றைச் சுட்டும் நம்பிக்கையும் தென்படும் கவிதைகள்என்றும் வகை பிரிக்கலாம். முதல் வகைக் கவிதைகள்ஓசை ஒழுங்கும் சந்தமும் கொண்டதாகவும், இரண்டாம்வகைக் கவிதைகளில் உரைநடையின் தீவிர நெடியையும் உணர்கிறேன். ஓசை ஒழுங்கும் சந்தமும்எனக்கு முன்னர் பரிச்சயமில்லாதவை, என் இயல்புக்குள்மிகச் சமீபத்தில் இணைந்தவை என்பதால் எனக்கு முதல் வகைக் கவிதைகளின் மேல் சார்பும் கனிவும்உள்ளது. பற்றுக்கோடாக மாறியிருக்கும் தொடர்ந்து கேட்கும் இசை காரணமாக இருக்கலாம். தெளிவு, அறிதல் விடுதலை ஆகிய அம்சங்களைக் கொண்டிருக்கும் உரைநடைக் கவிதைகளில் இருக்கும்கலங்காத தன்மை மிகவும் தற்செயலானது; அது அநித்யமானது; அரிதானது அதனால் அதை ஒரு போதும் நம்பவேண்டாம் என்று வாசகர்களிடமும் என்னிடமும்சொல்லி தெளிவுபடுத்திக் கொள்வதே பொறுப்பும் பொறுப்புத் துறப்பும் என்று கருதுகிறேன்.
No product review yet. Be the first to review this product.