அலக்ஸாண்டிரா போபாஃப் எழுதிய நூலை நண்பர் சிறில் அலெக்ஸ் கவனமாகவும், நுணுக்கமான குறிப்புகளுடனும் மொழியாக்கம் செய்துள்ளார். அந்த இலக்கிய ஆளுமைகள் பற்றிய குறிப்புகளும், மொழிபெயர்ப்பு பற்றிய குறிப்புகளும் இந்நூலில் உள்ளன.
இந்த மனைவிகளின் உலகம் வழியாகச் செல்லும் இந்நூல் ஒரு மிகப்பெரிய நாவலை வாசிக்கும் உளஎழுச்சியையும், மனநிறைவையும் அளிக்கிறது. இந்தப் பெண்கள் ஒவ்வொருவரும் மகத்தான கதைநாயகியராக திரண்டு வருகிறார்கள். சில இடங்கள் பெரும்புனைகதை போன்றவை.
இந்த ஒவ்வொரு வாழ்க்கையையும் தனித்தனி நாவல்களாக விரிவாக்கிவிடலாம். ஒரு புனைவெழுத்தாளனாகிய எனக்கு பலநூறு மானுடத்தருணங்களின் பெருந்தொகுப்பாகவே இந்நூல் தோற்றம் அளிக்கிறது. தமிழுக்கு ஒரு முக்கியமான நல்வரவு இது.
No product review yet. Be the first to review this product.