அருமையான நடை. என்ன ஒரு நக்கல், நையாண்டி. இலக்கிய வியாதிகளுக்கு ஒரு சவுக்கடி. வாரமலரில் இப்படி ஒரு அருமையான கதையை எதிர்பார்க்கவில்லை. அக்மார்க் நடுத்தர மாமாக்களுக்கும், சோம்பேறிகளுக்கும் பிடிக்காததில் ஆச்சர்யம் இல்லை. எழுத்து நடைக்காகவும், எள்ளலுக்காகவுமே மூன்று முறை ரசித்துப் படித்தேன். இது வாரமலரில் ஒரு மைல் கல். தொடர்ந்து இத்தகைய சிறுகதைகளை வெளியிடும்படி கேட்டுக்கொள்கிறேன். - ஒரு வாசகரின் கருத்து வட்டார மொழியின் அழகுக்கு, பொது மொழியோ, எழுத்து மொழியோ, இலக்கிய அலங்கார மொழியோ, செவ்வியல் மொழியோ கூட ஈடாகாது. ஏனென்றால், வட்டார மொழியானது, மண்ணிலிருந்தும், மண்ணில் முளைத்த மனிதர்களிடமிருந்தும், ரத்தமும் சதையுமான வாழ்க்கையிலிருந்தும் வருவது. அதில் உள்ளது, நயப்படுத்தப்படாத, கச்சாவான அழகும், மூலப் படைப்பாற்றல் கொண்ட உயிரோட்டமும். அது, உணர்வுபூர்வமாக நம்முடன் ஒன்றி உறவாடுகிறது. அதனாலேயே எந்த வட்டார மொழியானாலும், அதில் சில பல சொற்கள் புரியாவிட்டாலும், நம்மால் அம் மொழியை மிகவும் ரசிக்க முடிகிறது.
No product review yet. Be the first to review this product.