சொக்கன் மாதம் ஒரு நூல் அல்லது வாரம் ஒரு நூல் எழுதும் ஆற்றலும் அமைதியும் வாய்க்கப் பெற்றவர். அவர் இரவிலே வானத்தைப் பார்த்துச் சமயக் கட்டுரைகள் எழுதிவிட்டு, காலையில் பூமியைப் பார்த்து முற்போக்குக் கதைகள் எழுதுபவர். சொக்கன் அவர்களுடைய பேனாவிலே ஜீவஊற்று உண்டு. இவர் சிறந்த கவிஞர், பரிசு பெற்ற நாடகாசிரியர், நாவலாசிரியர், புதுமை மிக்க சிறுகதை ஆசிரியர், கட்டுரையாளர், வானொலி எழுத்தாளர். நந்தி - பேராசிரியர் சிவஞானசுந்தரம்
No product review yet. Be the first to review this product.