‘பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை' என்று எழுதிவைத்துள்ளார் வள்ளுவர். அந்தப் பொருள் நம் வாழ்வில் கிடைக்க நமக்கு முதல் முக்கியத் தேவை பணம்தான். நாளுக்கு நாள் அனைத்துத் துறைகளில் மாற்றம் கண்டு வரும் இவ்வுலகில் நிம்மதியான இல்லற வாழ்வுக்கு அடிப்படையாக இருப்பது பணமே. நாடுகளுக்கு நாடு பணத்தின் பெயர் மாறலாம், ஆனால் அதன் பயன்பாடு உலகத்தாருக்கு எல்லாம் ஒன்றே. அப்படிப்பட்ட பணத்தைச் சம்பாதிக்க எத்தனையோ வழிகள் இருந்தாலும் அற வழியில் வரும் வருமானமே வாழ்வுக்கு உண்மையான வளம் சேர்க்கும். சிலர் சீக்கிரமே பணக்காரராகிவிட வேண்டும் என்று தவறான வழியில் பணம் சேர்க்க நினைக்கும் இக்காலத்தில், நேர் வழியில் வரும் பணமே நிரந்தரம் என்பதைச் சொல்கிறது இந்து நூல். சம்பளத்துக்கு வேலை செய்யும் சாதாரண தொழிலாளராக இருந்து இந்தியாவின் முன்னணி தொழிலபதிராக உயர்ந்த திருபாய் அம்பானி முதல், ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்திருந்தாலும் இன்றும் சளைக்காமல் பணியாற்றிக் கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜா வரை பல்வேறு துறைகளில் தன் கடும் உழைப்பாலும் அறிவுத் திறனாலும் உயர்ந்து அதன்மூலம் கோடீஸ்வரர்களாக ஆனவர்களின் வாழ்வை எடுத்துக்காட்டி அவர்களின் ஊக்க நல்லுரைகளையும் தந்திருக்கிறார் நூலாசிரியர். மனம் நினைத்தால் பணம் வரும் வழி கிடைக்கும் என்பதை எடுத்துக்கூறும் இந்த நூல், நீங்களும் கோடீஸ்வரராக நிச்சயம் உதவும்.
No product review yet. Be the first to review this product.