நவீன செவ்வியல் ஆக்கங்கள் என்று தி. ஜானகிராமன் சிறுகதைகளை மதிப்பிடலாம். அவை உருவானதும் வெளிப்பட்டதும் சார்புகொண்டதும் செவ்வியல் அடிப்படையிலும் நோக்கிலும்தான். அவரது கதைகள் மானுடச் செய்கைகளை அவற்றின் இயல்புடன் பார்த்தன. சரிதவறு, நல்லது கெட்டது என்ற வரையறைகளை மீறிச் சித்தரித்தன. வாழ்வில் சிக்கல்களைக் கரிசனத்துடன் முன்வைத்தன. தெளிவும் கச்சிதமும் ஈரமும் நிரம்பியவை தி. ஜானகிராமன் கதைகள். காலத்தோடும் மொழியோடும் ஓட்ட ஒழுகியவை. அதே வேளையில் காலத்தை விஞ்சியும் மொழியைக் கடந்தும் விரிவுகொள்பவை. இன்றைய வாசிப்பிலும் புதிதாக மிளிர்பவை. புதிய அர்த்தங்களுக்கு இணங்குபவை. எல்லாத் தரப்பு வாசகருக்கும் அணுக்கமானவை. தி. ஜானகிராமனின் தேர்ந்தெடுத்த இருபத்தைந்து சிறுகதைகளின் தொகுப்பு இந்த நூல். எழுத்தைக் கலையாக மாற்றிய விந்தைப் படைப்பாளருக்கு அவரது நூற்றாண்டில் செய்யப்படும் சிறப்பும்கூட.
No product review yet. Be the first to review this product.