கலையின் மீதான அவநம்பிக்கை மனிதர்களை பலவீனமாக்கும். ஒரு சமூகத்தின் கலாச்சார மாற்றங்களையும், வாழ்க்கைக் குறித்தான அர்த்தங்களையும் நுண்மையாக அணுகவும் புரிந்து கொள்ளவும் கலை வடிவங்களே நமக்கு உதவியாய் இருக்கின்றன. லட்சியங்களும் நோக்கங்களுமின்றி விட்டேத்தியாய்த் திரியும் சமூகத்திற்கென கலைஞன் தன் வாழ்வை அர்ப்பணிக்கிறான். இலக்குகளை நோக்கி ஓடுகிறவர்களுக்கு லட்சியம் என்பது தம் வாழ்வை மேம்படுத்திக் கொள்வதற்கான போராட்டம் மட்டுமில்லை என்பதைத் திரும்ப திரும்ப உணர்த்த வேண்டியுள்ளது. இலக்கிய வாசிப்புதான் இலக்குகளைத் துரத்தும் மனிதர்களை கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது. ’மனித செயல்பாடுகள் அனைத்தின் அர்த்தமும் கலைரீதீலான பிரக்ஞையில்தான் இருக்கிறது.’ என்னும் தார்க்கோவ்ஸ்கியின் கூற்றை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.
No product review yet. Be the first to review this product.