Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

Compare list is empty

Please add products to compare.

பொருளற்றதாக்கப்படும் அரசியல் சட்ட உரிமைகள்: நெருக்கடி நிலை உலகம் - 3 Porulatradhakkapdum Arasiyal Satta Urimaigal

(0)
Price: 670.00

In Stock

SKU
ZERO 157
இரண்டாம் உலகப் போருக்குப் பின் மனித உரிமைகளின் முக்கியத்துவம் உலகெங்கிலும் உணரப்பட்டது. உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம் உருவானது. குடிமக்கள் அனைவரும் சமமாக நடத்தப்படுதல், எல்லோரும் எல்லாமும் பெறுவதற்கான வாய்ப்புகளைப் பெறுதல், ஆகக் கீழே உள்ளவர்களும், எண்ணிக்கையில் சிறிய பிரிவினர்களும் தங்களை மேம்படுத்திக் கொள்ளுதல், தமது நம்பிக்கைகளையும், பண்பாடுகளையும் காத்தல் உட்பட எல்லா உரிமைகளையும் பெறுவதற்கு அரசு பொறுப்பேற்றல் ஆகிய மதிப்பீடுகள் மேலுக்கு வந்தன. இப்படியாக உலக அளவில் மனித உரிமைப் பண்பாடு ஒன்று உருவானது. விடுதலைபெற்ற இந்தியா இதற்குரிய ஒரு அரசியல் சட்டத்தையும் உருவாக்கியது. எனினும் அதே நேரத்தில் இவற்றைப் பொருளற்றதாக்கும் காலனிய ஆள்தூக்கிச் சட்டங்களும் தொடர்ந்தன. போகப் போக அரசியல்சட்டத்தின் அடிப்படைகளுக்கு எதிரான அடக்குமுறைச் சட்டங்களும் அதிகமாயின. கடந்த பத்தாண்டுகளில் அரசியல் சட்ட நிறுவனங்களும் தாக்குதலுக்கு ஆளாயின. அடித்தள மக்களுக்கான இட ஒதுக்கீடு, சிறுபான்மை மக்களின் உரிமைகள் எல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போயின. இந்த மாற்றங்கள் குறித்த ஆழமும் விரிவும் மிக்க ஒரு முக்கிய தொகுப்பாக உருப்பெற்றுள்ளது அ,மார்க்சின் இத் தொகுப்பு. ஒரு ஐம்பது ஆண்டுகால மனித உரிமைகளின் வரலாற்றுத் தொகுப்பாகவும், இன்றைய அரசியல் மற்றும் மனித உரிமைச் சட்ட மாற்றங்களைப் புரிந்துகொள்வதற்கான ஓர் அடிப்படை ஆவணமாகவும் உருப்பெற்றுள்ளது இந்நூல். "எனினும் நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை. நம் மூத்த முன்னோடிகள் உருவாக்கிய அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிரான நம்பிக்கைத் துரோகங்களுக்குப் பணிந்துபோவதல்ல வரலாற்று நியதி. நம் முன்னோடிகள் உருவாக்கிய அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிரான நம்பிக்கைத் துரோகங்கள் அத்தனை எளிதாக வெற்றிபெற இயலாது." - நோம் சாம்ஸ்கி

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.