வாசகனாக அறிமுகமாகிய பொழுதிலிருந்து தொடர்ந்த உரையாடல்களில், அனுபவங்களின் சுரங்கமாகவே ராம் தங்கத்தை உணர்ந்தேன், திருக்கார்த்தியல், ராஜவனம் இரண்டும் - அச்சுரங்கம் நமக்களித்த பொக்கிஷங்கள். - அடுத்தத் தொகுப்பாக வந்திருக்கும் புலிக்குத்தியும் அனுபவச் சுரங்கத்தின் அரிய பொக்கிஷமே! வாசிப்பின்வழி அனைவரும் அதை உணர முடியும். நவீனத் தமிழ் "இலக்கியத்தின் தவிர்க்கவியலா முகமாக ' மாறியுள்ள ராம் தங்கம் இன்னும் பல உச்சங்கள் எட்டுவார் என்பதற்கு இந்நூல் மேலும் ஒரு சான்று.
- கே. வி. ஜெயஸ்ரீ ** நம் மண்ணின் கதைகளை, அதன் சாரத்தை, உயிரோட்டத்தை உள்ளவாறே வெகுசில எழுத்தாளர்கள்தான் பதிவு செய்கிறார்கள். அத்தகைய எழுத்துகள்தான் அசலானவை; உயிர்ப்பானவையும்கூட. அப்படி தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தையும், அதன் மதிப்பீடுகளையும், சாதியத்தையும், தன் எழுத்துகளில் பிரதிபலிக்க வைத்திருக்கும் 'ராம் தங்கம் ஆகச் சிறந்த கதைசொல்லியாக நம் கண்முன் நிற்கிறார்.
- உமா ஷக்தி
No product review yet. Be the first to review this product.