'ஒரு லட்ச ரூபாய்க்கு ஒரு கார்' என்ற மிகப் பெரிய கனவின் மூலம்தான் இந்திய மக்களுடைய கவனத்துக்கு வந்தார் ரத்தன் டாடா. 'இது சாத்தியம்தானா?' என்று சிலரும், 'சாத்தியமாகிவிட்டால் எப்படி இருக்கும்!' என்று பலரும் வியந்து நிற்க, ரத்தன் டாடா தலைமையில் தொழில்நுட்பம், விடாமுயற்சியின் துணையோடு அந்தக் கனவை நனவாக்கிச் சாதனை புரிந்தது டாடா நிறுவனம்.
ஆனால், ஒரு லட்ச ரூபாய்க் காருக்கு முன்பும் சரி, பின்பும் சரி, ரத்தனுடைய சாதனைகள் ஏராளம். டாடாவைப் போன்ற ஒரு மிகப் பெரிய குழுமத்தைத் தொலைநோக்குடன் வழிநடத்தியவர், புதிய பணிவாய்ப்புகளை உருவாக்கியவர், உலக அரங்கில் இந்தியாவுக்குத் தனி மதிப்பை உண்டாக்கித்தந்தவர் என ரத்தனுடைய பங்களிப்பு மிகப் பெரியது.
யார் இந்த ரத்தன் டாடா?
டாடா குடும்பத்தில் பிறந்ததாலேயே அவர் அந்நிறுவனத்தின் தலைவராகிவிட்டாரா?
இத்தனைப் பெரிய சாதனைகளைப் புரிவதற்கான அடித்தளத்தை அவர் எப்படி உருவாக்கிக்கொண்டார்?
நானோவைப்போல் அவர் அறிமுகப்படுத்திய, மாற்றியமைத்த புதுமைத் தயாரிப்புகள் என்னென்ன?
இந்தியத் தொழில்துறைக்கு அவருடைய கொடைகள் என்னென்ன?
அவருடைய வெற்றிக் கதையில் நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் எவை?
இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் சுவையான நடையில் சான்றுகளுடன் பதிலளிக்கிறது என். சொக்கனுடைய இந்தப் புத்தகம், ரத்தன் டாடா என்ற மனிதரை, மேலாளரை, தலைவரை, ஆளுமையைச் சிறப்பாக அறிமுகப்படுத்துகிறது.
No product review yet. Be the first to review this product.