சாதி பற்றிய பேச்சுக்கள் பெரும்பாலும் இங்கே அப்பேச்சுக்கள் எழுந்த சென்ற நூற்றாண்டின் வரலாற்றுப் புரிதலின் அடிப்படையில் அமைந்தவை. அதற்குப்பிந்தைய வரலாற்றுக் கொள்கைகள், சமூகவியல் கொள்கைகளை கருத்தில் கொள்ளாதவை. மிகமிக உள்நோக்கம் கொண்டவை. அரசியல் உள்நோக்கம், அதற்குள் தன் சாதி- மதம் சார்ந்த உள்நோக்கம். அதிலிருந்து நாம் பலவகையான பாவனைகளை மேற்கொள்கிறோம். சாதியடையாளங்களை அரசியலுக்காக, பொருளியலுக்காக சூடிக்கொண்டு திரிகிறோம். வெளியே சாதியொழிப்பு பேசுகிறோம். சாதிப்பெருமிதம் கொண்டிருக்கிறோம். கூடவே சாதியை கற்பித்தவர்கள் என சிலரை வசைபாடுகிறோம். இங்கே சாதி இல்லாத இடமே இல்லை. சாதிமறுப்பு பேசாதவரும் இல்லை. இந்த நூல் வெவ்வேறு காலகட்டங்களில் சாதி குறித்து நிகழ்ந்த உரையாடல்கள் வழியாக சில தெளிவுகளை அளிக்கிறது
No product review yet. Be the first to review this product.