இத்தொகுப்பில் ஒன்பது கதைகள் உள்ளன. ஒன்பது கதைகளிலும் காந்தியடிகளின் வாழ்க்கைக்காட்சிகள் முன்பின்னாக அடுக்கிவைக்கப்பட்டிருக்கின்றன. அசல் பாத்திரத்துக்கு நிகராகக் கதைப்பாத்திரமும் வரலாற்றை ஊடுருவி உலவுகின்றனர். நவகாளி யாத்திரையை முன்வைத்துப் புளகிதம், சமர்க்களம் என இரு கதைகளை எழுதியிருக்கிறார் கலைச்செல்வி. இரண்டுமே ‘கரணம் தப்பினால் மரணம்’ கதைகள். இரு கதைகளையும் இருநூறு விழுக்காடு கவனத்தோடும் கூர்மையோடும் ஒரே ஒரு சொல் கூடப் பிசகிவிடாதபடி எழுதியிருக்கிறார் கலைச்செல்வி. வெள்ளப்பெருக்கில் படகை ஓட்டிக்கொண்டு வருவதுபோல மிகவும் லாகவமாகக் கதையைத் தொடங்கி அழகாகக் கொண்டுசெல்கிறார்.
காந்தியடிகளை ஆய்வு செய்வது என்பது ஒரு பின்னல். அவர் காலத்து மனிதர்களையும் சூழலையும் ஆய்வு செய்வது என்பது இன்னொரு பின்னல். இரண்டையும் அழகாகப் பின்னிப்பின்னி ஒவ்வொரு கதையையும் நகர்த்திச் செல்கிறார் கலைச்செல்வி. இத்தனை ஆண்டுகளாக பல்வேறு நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதி எழுதி கைவரப் பெற்ற திறமை அவருக்கு மிகவும் உதவியாக இருக்கிறது.
- பாவண்ணன்
No product review yet. Be the first to review this product.