நவீன கவிஞர்களில் பெரும்பாலானோர் மார்க்ஸிய தத்துவங்களோடு தங்களைப் பிணைத்துக்கொள்பவர்களாக இருக்கிறார்கள். பிரேம்சந்தின் வரிகளில் சொன்னால்: “அரசியலுக்கு முன்னால் வழிநடத்தும் ஒளியைப் போன்றது இலக்கியம், உண்மையை அது வெளிப்படுத்துகிறது.” ஃபாசிசத்துக்கு எதிராக ஜனநாயகக் கோட்பாடுகளை முன்னிறுத்துவது கவிஞர்களின் கடமை, அதுவே நவீனத்துவத்தின் அடிப்படைக்கூறு. இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளை இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். இயற்கை, வறுமை, நகரங்களை நோக்கி நகரும் வாழ்வு, தனிமனித வாழ்க்கை முதல் சமூகச்சூழல் வரைக்கும் இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகளின் புழங்குவெளி மிகவும் விசாலமானது. சக மனிதன் மீது அன்பு செலுத்த வேண்டிடும் ஓர் உலகளாவிய இறைஞ்சுதல் இந்தக் கவிதைகளின் மௌனங்களுக்குள் ஒளிந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல.
- கார்த்திகைப் பாண்டியன்
No product review yet. Be the first to review this product.