ஆட்சிக் கவிழ்ப்பு, ராணுவ ஆட்சி எல்லாம் பாகிஸ்தானில் அவ்வப்போது நடப்பதுதான். அயூப் கான், யாஹியா கான், ஜியா உல் ஹக் வரிசையில் வந்த பர்வேஸ் முஷாரஃப் சற்று மாறுபட்ட சர்வாதிகாரி. கார்கில் யுத்தத்தைப் பாகிஸ்தான் தரப்பில் வடிவமைத்தவர். பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்து, பிறகு அவரைக் கவிழ்த்துவிட்டு அதிகாரத்தில் அமர்ந்தவர். தேசத்தை - ஆட்சியை ஒரு பிரைவேட் லிமிடெட் கம்பெனி போல வழி நடத்தப் பார்த்தவர். இறுதியில் அவரே வளர்த்து ஆளாக்கிவிட்ட தீவிரவாத இயக்கங்களால் சூனியம் வைக்கப்பட்டு, வேறு வழியின்றி, ஆண்ட காலம் வரை அமெரிக்க அடிமையாக இருந்துவிட்டுப் போனார். ஆட்சிக்காலத்துக்குப் பிறகு தேசத்துரோக வழக்கு வரை போட்டுத் தாளித்துவிட்டார்கள். உயிர் தப்பி லண்டனுக்குச் சென்று பிறகு துபாயில் அடைக்கலமாகி, இறுதி மூச்சை அங்கே விட்டார். சர்வாதிகாரிகள் எப்படி உருவாகிறார்கள்? எந்தெந்தக் காரணிகள் அவர்களை உச்சத்துக்கு எடுத்துச் செல்கின்றன? எதில் தடுக்கி விழுகிறார்கள்? ஏன் மீள முடியாமலே போகிறது என்பதை முஷாரஃபின் வாழ்வைக் கொண்டு தெளிவாக அறிய முடியும்.
No product review yet. Be the first to review this product.