தயாரிப்பாளர் பா. இரஞ்சித் அணிந்துரை இயக்குநர் தமிழ் முன்னுரை
தென் தமிழகத்தில் புழங்கும் சாதியின் தீவிரம் அதற்கு வெளியிலிருப்பவர்களுக்கு எல்லா விதங்களிலும் உணர்த்தப்பட்டிருக்கிறது. தமிழ் சினிமாவிற்கு அதில் பெரும் பங்கு உண்டு. கொங்கு மண்டலத்தின் யதார்த்தம் திரைப்படங்களில் வேறு விதமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அங்கே நிலவும் சாதியின் கோரத்தன்மையை அதன் யதார்த்தத்துடன் பெருமாள் முருகனின் கதைகள் வழியாகவே நான் அதிகம் புரிந்துகொண்டேன்.
‘வறுகறி', 'மாப்பு குடுக்கோணுஞ் சாமீ' ஆகிய கதைகளைத் திரைப்படமாக உருமாற்றியதில் பெருமாள் முருகனின் பங்கும் அளப்பரியது.
சிறுகதைகளில் இடம்பெறும் உரையாடல்களை, விளக்கங்களை, மனிதர்களின் எண்ணவோட்டங்களைக் காட்சியாக மாற்றுவதென்பது சவாலானது. அது மிக லாகவமாகப் பெருமாள்முருகனுக்குக் கைகூடியிருக்கிறது சிறுகதையாகப் படித்தபோதிருந்த அதே அதிர்வு திரைக்கதையாகவும் படிக்கும்போது ஏற்படுவதென்பது அரிது. பெருமாள் முருகனும் தமிழும் அதை அழகாகச் செய்திருந்தனர். திரைமொழியிலும் அதே அதிர்வை இயக்குநர் தமிழ் ஏற்படுத்திக் கொடுக்க இந்த முப்பரிமாணத் தாக்கம் ஒரு இனிய அனுபவமாக எனக்கு இருந்தது. சேத்துமான் திரைப்படம் நீலம் புரொடக் ஷன்ஸுக்குப் பெரிய நன்மதிப்பைப் பெற்றுத் தந்திருக்கிறது.
No product review yet. Be the first to review this product.