மானுட வரலாற்றில் அங்கங்கே சிதறியிருந்த இனக்குழுக்களை ஒன்று திரட்டி, குடிமக்களாக்கி அவர்களை ஆட்சி செய்கிற அரசு என்கிற அமைப்பு உருவான தருணத்திலேயே கோட்டை என்னும் கருத்தாக்கம் உருவாகி விட்டது. ஒருபுறத்தில் கோட்டை அரண்மனைக்கும் மக்களுக்கும் பாதுகாப்பு வழங்குகிறது. இன்னொரு புறத்தில் மற்ற அரசுகளின் மதிப்பில் கெளரவத்துக்குரிய தோற்றத்தைச் சம்பாதித்துக்கொள்கிறது. அரசகுல வரலாற்றில் கோட்டைகளைக் கட்டியெழுப்புவதும் ஒருவர் கோட்டையை இன்னொருவர் இடிப்பதும் மாறிமாறி நிகழ்ந்திருக்கிறது. சிலர் இயற்கையாகவே உள்ள மலையரண்களை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு கோட்டைகளை எழுப்பினார்கள். சமவெளிப் பிரதேசத்தில் அரசாண்டவர்கள் புதிய கோட்டையை தமக்கு விருப்பமான வகையில் வடிவமைத்துக்கொண்டார்கள். எல்லாமே வெற்றியின் அடையாளங்கள்.
No product review yet. Be the first to review this product.