உலகின் மிகச் சிறந்த பெண் எழுத்தாளர்களாகக் கருதப்படும் அமா அடா ஐடூ மற்றும் பெஸீ ஹெட்டின் சிறுகதைகள் என்னால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இந்தத் தொகுப்பில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. வருடக்கணக்காக ஆபிரிக்கா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் கோடையையும், விவசாயம் மற்றும் வேட்டை சார்ந்த குடும்ப நடைமுறைகளையும், கொடும் வறுமையிலும் கௌரவமாக வாழ முற்படும் பெண்களது நிலைப்பாட்டையும், தாய்மைக்கு உரிய முக்கியத்துவத்தையும், அந்நியர்களது ஆக்கிரமிப்பினால் அப்பாவிப் பெண்கள் எவ்வாறு தமது உடலை விற்கும் விலைமாதுக்கள் ஆகிறார்கள் என்பதையும் இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள் விவரிக்கின்றன. பெஸீ ஹெட்டும், அமா அடா ஐடூவும் அவர்கள் எழுதியுள்ள சிறுகதைகளில் பெண்களை மிகுந்த கௌரவத்துக்குரியவர்களாக, யதார்த்தமாக எழுதியிருப்பதைக் காணலாம். அவையே இன்றளவும் அவர்களை சர்வதேசம் முழுவதும் நேசிக்க வைத்திருக்கின்றன.
No product review yet. Be the first to review this product.