தி.ஜானகிராமன் முதலும் முடிவுமாகப் புனைகதைக் கலைஞர். அரிதாகவே கட்டுரையாளராகச் செயல்பட்டிருக்கிறார். அவரது புனைவாக்கங்களின் எண்ணிக்கையையும் அளவையும் ஒப்பிட்டால் கட்டுரைகளாக எழுதியவை குறைவு. எனினும் அவை அவரது படைப்பியக்கத்தைப் புரிந்துகொள்ள முக்கியமானவை.
இதுவரை வெளியானவையும் இதழ்களில் வெளிவந்து வாசகர்களுக்கு எட்டாதவையுமான கட்டுரைகளும் தி.ஜானகிராமன் அபூர்வமாக எழுதியிருக்கும் முன்னுரை, மதிப்புரைகளும் முதன்முறையாக நூல் வடிவில் தொகுக்கப்பட்டுள்ளன. எழுத்து, கலை, பயணம், சமூகம், தன்னனுபவம் ஆகிய பகுப்புகளாகத் தொகுக்கப் பட்டிருக்கும் இந்த நூல் ஓர் உண்மையைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. அது – கலை உண்மையின் வெளிச்சமும் வாழ்வின் ஈரமும் வெளித்தெரியும் அவரது புனைவு எழுத்துகளுக்குச் சற்றும் குறைந்தவையல்ல தி.ஜானகிராமனின் புனைவு அல்லாத எழுத்துகளும்.
-சுகுமாரன்
No product review yet. Be the first to review this product.