“தமிழ் ஒரு மொழி அடையாளமாக ‘மட்டும்‘ என்றும் இருக்கமுடியாத மொழியாகவே இருந்து வருகிறது. எல்லா மொழிகளுக்கும் மொழிஎன்பதற்கு மேல் பண்பாடு, அரசியல், சமூகம்என்ற வேறு அடையாளங்களும் உண்டு. இன்றைய புரிதலில் மொழியென்பதுமனமும் - உடலும் - வாழ்வும் என விரிந்தபொருள் தரக் கூடியதாக புலப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழ் என்பதுஇவற்றிலும் கூடுதலான உள்ளடக்கங்களைக் கொண்டுவிட்டது. இது கொண்டுள்ளகூடுதலான அர்த்த அடர்த்திக்கு இதன் தொன்மை ஒரு அடிப்படையான காரணம் என்பது நமக்குத்தெரியும். ஆனால் இதன் தொன்மையையும் மீறித் தமிழ் நமக்கு வேறுபலநினைவுகளைக் கொண்டு வருகிறது. மொழியென்றால் அது நினைவுத் தளத்திலும்நினைவுள் தளத்திலும் நினைவிலித் தளத்திலும் படிந்து கிடப்பது. ஒரு பேச்சில் மட்டுமின்றி மௌனத்திலும் அம்மொழியே நிறைந்து நிற்கிறது.மௌனத்தை ‘உலகப் பொதுமை‘ என்பவர்உண்டு. ஆனால் தமிழரின் மௌனம் தமிழ் மௌனம்.”
தமிழ் ஒரு மொழி என்பதைக்கடந்து வாழ்வுருவாக்கமாக மாறமுடியுமா?
மறுத்தும் ஏற்றும் பேசிப்பார்க்கலாம்
No product review yet. Be the first to review this product.