ஒருசேர இப்பதினோரு கதைகளையும் வாசிக்க நேர்ந்தபோது,பல கதைகளிலும் பள்ளிப் பருவத்துச் சிறுவன் ஒருவனின் அனுபவப் பகிவுகளாகத் தோன்றின. எவரது அனுதாபத்தையும் கோர முயலாக, நேர்மையான, உரத்த ஆவேசக் குரல்கள் கலக்காக எளிமையான பதிவுகள். அவலச் சுவை நிறைந்த சிறுவனின் அன்றாட வாழ்க்கைப் பாடுகள். அனுபவித்து அறிவதன்றி, கற்பனை நெசவு வரிகள் அல்ல அவை. "கடந்து போகும்' கதை பசிக்கு வேலைக்குப் போகும் படிக்க வாய்ப்பற்ற சிறுவனின் கதை, தமிழில் இதுவரை எழுதப்பட்டிராதது. இது லத்தீன் அமெரிக்கக் கதைகளின் தழுவலோ, தாக்கமோ, 'போலச் செய்தலோ அல்ல உணர்ந்த வலி.
No product review yet. Be the first to review this product.