கொங்கு வட்டார மண்மணம் கமழும் இக்கதைகளில் மனித மனங்களின் மெல்லிய சலனங்கள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், போராட்டங்கள் எனத் தொடங்கி புரட்சிகரமான எதிர்வினைகள் வரை நிகழ்வுகள் மிக இயல்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வாசித்து விட்டு மீண்டும் அசை போட்டுப் பன்முகப் பொருள் தளங்களைக் காணவும், வாசகப் பிரதிகளை உருவாக்கவும் வாய்ப்பளிக்கும் கதை மொழி, சங்கப் பாடல்களின் உள்ளுறை மரபை நினைவூட்டுகிறது. 'தொட்டால்' கதையில் ஆணின் காம உணர்வுகளை மொழிப் படுத்தியுள்ளமை வியப்பைத் தருகிறது. -இரா. முருகவேள் எழுத்தாளர்
No product review yet. Be the first to review this product.