மஞ்சுநாத் இமயமலையில் பலமுறை பயணம் செய்தவர். இனிமேலும் செய்யப்போகிறவர். பனி போர்த்திய மலையும் செடிகொடிகளும் மரங்களும் படர்ந்த மலையும் பெளதிக இடங்களாகவும் உருவகங்களாகவும் அவர் கதைகளில் விரவிக்கிடக்கின்றன. ஒன்றைத் தொட்டால் இன்னொன்றினுள் இழுத்துப்போகும் விசைகளாகச் சில கதைகள்; ஒரு பாதையில் நுழைந்ததும் புதிர்ப்பாதைகளாக எங்கேங்கோ கூட்டிச் செல்லும் கதைகள்; கரிக்குருவிகளின் கீச்சொலிகளாகவும் வாசங்களாகவும் உயிர்களை விழுங்கும் மலைப்பாம்பாகவும் உணர்வுகளையும் உயிர் பறிக்கும் நினைவுகளையும் தாங்கிவரும் கதைகள்; இடாகினிகளும் உண்டு; கால்நடைகளுக்குப் போடுவதுபோல் இடாகு போடுதலும் உண்டு; அங்கங்கே இடார்களும் உண்டு. ஆனால் எல்லாக் கதைகளின் பின்னாலும் ஒலித்துக்கொண்டே இருப்பது சுருதி பிசகாத இடாயம். - அம்பை
No product review yet. Be the first to review this product.