ஒரு கடைக் கோடி மனிதன் உணர்ந்த, அவனைப் பாதித்த, அவனுக்குப் புரியாத அல்லது புரிந்துவிட்டதாய் நினைத்துக்கொண்ட விஷயங்களின் கூட்டுப் பகிர்தலே இந்த சிறுகதைத் தொகுப்பு! நதிகள் தமது ஓட்டத்தின் சேகரிப்புகளாகிய திணர்த்த (செழித்த) வண்டல்களை, நிதானிக்குமிடத்து சட்டெனப் படிவித்துத் தனது வளமையைச் சீர்தூக்கிப் பார்த்துக்கொண்டு விடுகின்றன. வாழ்க்கையின் சீரானதும், சீரற்றதுமான ஓட்டத்தில், எனது சுவாதீனத்திற்கு உட்பட்டோ அல்லது உட்படாமலோ ஆழ்மன முடுக்குகளில் சேர்ந்த அனுபவப் படிமங்களே, இந்தக் கதைகள் முழுவதும் கதைமாந்தர்களின் குரலாகவோ, சம்பவங்களாகவோ வியாபித்து நிற்கின்றன. ஓட்டத்தைச் சற்றுத் தனித்துக்கொண்டு ஆசுவாசம் கொண்ட பொழுதுகளில், படிந்த அனுபவ வண்டல்களைக் கிளறி விளையாட... ஒரு பரம சுகம்! அந்தச் சுகத் தேடல்களுக்கான விடைகளே இந்தக் கதைகள்!
No product review yet. Be the first to review this product.