நேர்மையாகவும், கறாராகவும், கடினமாகவும் உழைத்த மனிதனின் வாழ்வில் எதிர்பாராத சிக்கலும், அவப்பெயரும், அவமானமும் நேர்கிறபோது தோன்றும் உள்ள உணர்வுகளையும், அவற்றை எதிர்கொண்டு தொடர்ந்து போராடி வெற்றிபெற்று அப்பழுக்கற்ற தன் தூய்மையை நிலைநாட்டிய உள்ள உறுதியையும் சுயசரிதைக் குறிப்பாகக் கொண்டுள்ளது 'விண்வெளித் தழும்புகள்' என்னும் இந்த நூல். அடுத்தது என்ன என்று ஆர்வத்தைத் தூண்டும் வகையில் திகில் நாவலைப்போல திடுக்கிடும் திருப்பங்களோடு திகழும் இந்த நூலை நிகழ்காலத்தையும், கடந்த காலத்தையும் அடுத்தடுத்து ஓடவிட்டு அற்புதமாக எழுதியிருக்கும் விஞ்ஞானி நம்பி நாராயணின் நடை சிறிதும் பிசகாமல் எந்த இடத்திலும் பிசிறு தட்டாமல் வாசிக்கும்போதே வழுக்கிக்கொண்டு செல்லும் அளவு நேர்த்தியாக மொழியாக்கம் செய்திருக்கிறார் ஜே.வி. நாதன்.
- முனைவர் இறையன்பு
---
'தொடர்ந்து ஒரு அலறல் சப்தம்... இதுவரை எப்போதும் அப்படி ஒரு அலறல் ஒலியை எங்குமே கேட்டதில்லை... அருகில் அமர்ந்தேன்... அவர் தலையை எடுத்து என் மடியில் வைத்துக் கொண்டேன்... தலையை கோதி விட்டேன்... அவர் பெயரை மென்மையாக உச்சரித்தேன்... மீனா அமைதியானார்... அவர் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் என் தொடையை நனைத்ததை உணர்ந்தேன்'...
இந்த வரிகளை படிக்கும் போது எவருக்குமே கண்களில் நீர் துளிர்க்கும்... உறுதியாய் !! 28 ஆண்டுகள் இவர் அனுபவித்த சத்திய சோதனை இவர் குடும்பத்தை, மனைவி மகள் மகன் சகோதரிகள் என்று அனைவரையுமே, அடி நெஞ்சு வரை சென்று காயப்படுத்தி உள்ளது... ஒரு ஞானியை போல துன்பம் இன்பம் எது வந்தாலும் அடிப்பட்டோ, துவண்டோ போகாமல் தான் செய்ய வேண்டியதை மன தைரியத்துடன், தெளிவுடன் செய்து தன் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக வாழ்ந்து கொண்டிருப்பவர் திரு. நம்பி நாராயணன்!!
- சிவசங்கரி
No product review yet. Be the first to review this product.