இந்திய நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட ஏழு அயல்நாட்டவரின் கதைகளை இந்நூல் சொல்கிறது. மேலை நாட்டவரான இவர்கள் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திலிருந்து இந்தியாவை மீட்கப் போராடியவர்கள். லட்சியங்களால் உந்தப்பட்ட இவர்கள் அனைவருமே காந்தியடிகளிடம் ஈடுபாடு கொண்டிருந்தனர். சிலர் அவரைத் துதித்தனர். சிலர் அவரிடம் கருத்து வேறுபாடு கொண்டாலும் அவர் பாதையை ஏற்றார்கள். உலகின் தலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரான ராமச்சந்திர குஹா கூறும் இந்தக் கதைகள், இந்திய சுதந்திரப் போராட்டத்தைப் பற்றிய பல புதிய புரிதல்களைத் தருகின்றன. பிரமிக்கவைக்கும் இந்தப் பதிவுகள் பல இடங்களில் நெகிழவும் வைக்கின்றன. இந்தியாவைத் தமது சொந்த நாடாக வரித்துக்கொண்ட இந்த ஆளுமைகளோடும் அவர்களின் வாழ்வோடும் நாம் நெருக்கம் கொள்ளும் வகையில் தியடோர் பாஸ்கரன் இதைத் தமிழில் தந்திருக்கிறார்.
No product review yet. Be the first to review this product.