மேலோட்டமான பார்வையில் இவை நாம் இதுவரை வாசிக்காமல் இருந்துவிட்ட ஜென் கதைகளைப் போலவே தோற்றமளிக்கும். ஏனெனில் இக்கதைகளில் நிஜமான ஜென் குருமார்கள் வருகிறார்கள். அவர்கள் வாழ்ந்த காலம், அன்றைய மன்னர் வம்சங்கள், அக்கால வாழ்க்கை முறை, அரசியல், அவற்றின்மீது மதங்களும் சித்தாந்தங்களும் செலுத்திய செல்வாக்கு எல்லாம் அப்படி அப்படியே பதிவாகும். இதில் எந்த இடத்தில் புனைவு ஒரு பூனையைப் போலப் புகுந்து இன்றைய நவீன வாழ்வையும் அதில் நாம் காணும் மனிதர்களையும் கொண்டு நிறைக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதுதான் இதில் உள்ள சுவாரசியமான விளையாட்டு. அதிகபட்சம் முந்நூறு சொற்களுக்கு மிகாத இக்கதைகள் கட்டியெழுப்பும் உலகில் நமக்குத் தெரிந்த பலபேர் மாறுவேடத்தில் நடமாடுகிறார்கள். சில கதைகளில் நாமே வாழ்கிறோம். சிலவற்றில் நம்மோடு பாராவும் உடன் வருகிறார். யார், எங்கே, எந்தக் கட்டங்களில் நிரம்பிப் புதிர்களை உருவாக்குகிறார்கள் என்று கட்டவிழ்க்கும் பணியை ஆசிரியர் நம்மிடம் தந்துவிட்டு விலகிவிடுகிறார். அவ்வகையில் இத்தொகுப்பு ஒரு கதை வடிவ crossword puzzle ஆகிவிடுகிறது. இத்தொகுப்பில் உள்ள அனைத்துக் கதைகளுக்கும் டேவி. சாம் ஆசீர் செயற்கை நுண்ணறிவின் துணை கொண்டு கோட்டுச் சித்திரங்கள் தீட்டியிருக்கிறார். அவை பா. ராகவன் சித்திரிக்கும் கதையுலகின் இன்னொரு பரிமாணத்தைத் துலக்கிக் காட்டுகின்றன.
No product review yet. Be the first to review this product.